ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் அருகே கள்ளாற்றில் நடந்த மணல் கொள்ளையை தடுக்க சென்ற தலைமைக் காவலர் கனகராஜ் (41) டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். பின்பு அவரை கொலை செய்த சுரேஷ் (32) என்பவரை காவல்துறை கைது செய்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜுலை, 20ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பான வழக்கு ராணிப்பேட்டை இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று (பிப்.18) வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீனிவாசன் கொலைக் குற்றவாளியான சுரேசுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், ரூபாய் 7 ஆயிரம் அபராதம் செலுத்த தீர்ப்பளித்தார்.
தண்டனை பெற்ற சுரேஷ் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவனை கடத்திய கும்பல் கைது!