ETV Bharat / state

பைனான்சில் பைக் வாங்கிய இளைஞர் தற்கொலை..! பரபரப்பு புகார்? - அவளூர் போலீசார்

teenager committed suicide near Ranipet: பைனான்சில் பைக் வாங்கிய இளைஞர் மாதத் தவணையை செலுத்தாத நிலையில் பைனான்ஸ் ஊழியர்கள் பைக்கை எடுத்துச் சென்ற மன உளைச்சலில், இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

teenager committed suicide near Ranipet
ராணிப்பேட்டை அருகே பைனான்சில் பைக் வாங்கிய வாலிபர் தற்கொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 9:46 PM IST

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 24). இவர் ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு நெமிலியில் உள்ள தனியார் பைனான்ஸ் ஒன்றில் கடன் வாங்கி அரிதாஸ் பைக் ஒன்றை வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதற்கான மாத தவணைத் தொகையைச் செலுத்தத் தவறியதால் பைக்கை அரிதாஸ் வீட்டில் இருந்து பைனான்ஸ் ஊழியர்கள் எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த அவமானம் தாங்காமல் அரிதாஸ் தனது வீட்டில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்து உள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கிருந்து அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அரிதாஸ் உயிரிழந்தார். இதன் தொடர்ச்சியாக இது குறித்து அவளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டில் இருந்து பைக்கை எடுத்துச் சென்ற அவமானம் தாங்காமல் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எண்ணத்தைக் கைவிடுக: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல்-help@snehaindia.org நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட் 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028

தற்கொலை எண்ணத்தைக் கைவிடுக
தற்கொலை எண்ணத்தைக் கைவிடுக

இதையும் படிங்க: நிலத் தகராறில் முன்விரோதம்! வீடு புகுந்து கணவன் - மனைவிக்கு அரிவாள் வெட்டு..! திருச்செந்தூர் அருகே பயங்கரம்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.