ராணிப்பேட்டை: நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் அரக்கோணத்தைச் சேர்ந்த நிஷாந்த் (20), அப்பு (எ) தினேஷ், தீனா (எ) தினேஷ்குமார் (20), ஆகியோரை காவல்துறையினர் செய்தனர்.
இதேபோல் பகத்சிங் (26), திலீப் (23), சரத் (எ) சரத்குமார் (25), காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடியைச் சேர்த்த பார்வேந்தன் (23), விஜய்குமார் (24) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய எட்டு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜிடம் பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் எட்டு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 6 மாதங்களில் 100 பேர் குண்டர் சட்டத்தில் கைது - காவல் கண்காணிப்பாளர் தகவல்