ETV Bharat / state

IFS Scam: நெமிலியில் ஐஎப்எஸ் நிதி நிறுவன ஊழியர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவன ஊழியர் வீட்டில் அமலாக்க துறை அதிகாரிகள் 12 மணி நேரமாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Apr 4, 2023, 11:27 AM IST

Updated : Apr 4, 2023, 2:26 PM IST

12-hour raid by enforcement officers at IFS financial institution employee's house!
ஐஎப்எஸ் நிதி நிறுவன ஊழியர் வீட்டில் அமலாக்க துறை அதிகாரிகள் 12 மணி நேர அதிரடி சோதனை!

ராணிப்பேட்டை: ஐஎப்எஸ் நிதி நிறுவன ஊழியர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 12 மணி நேரமாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நெமிலி, பணப்பாக்கம், பெரும்புலிபாக்கம், ஆட்டுப்பாக்கம், சயனபுரம், சேந்தமங்கலம், அகவலம், ரெட்டிவலம், ஓச்சேரி, காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஐஎப்எஸ் என்னும் தனியார் நிதி நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முக்கிய ஊர்களில் கிளை அலுவலகங்கள் அமைத்து, பொதுமக்களிடம் ஒரு லட்சம் ரூபாய்
முதலீடு செய்தால் மாதம் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வட்டி தருவதாகத் தெரிவித்து, சுமார் ஆயிரம் கோடி அளவில் வசூல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, சில மாதங்கள் பணம் கட்டிய முதலீட்டாளர்களுக்கு மாதம் முதல் தேதியிலேயே வட்டி பணம் வங்கியின் வாயிலாக வழங்கப்பட்டது. இந்த செய்தி பொதுமக்களிடம் காட்டுத் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் நகைகளை அடகுவைத்தும், வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்தும், விளை நிலங்களை விற்றும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

பணப்பாக்கம் பகுதியில் சிலர் தாங்கள் தொழில் செய்து வந்த விசைத்தறிகளை விற்று இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன் முதலீட்டாளர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்படும் வட்டி நிறுத்தப்பட்டது. இதனால், பதற்றமடைந்த பொதுமக்கள் பணம் கட்டியவர்களிடம் தங்கள் அசலை திருப்பி தருமாறு நெருக்கடி செய்தனர். சிலர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், நெத்திலியைச் சேர்ந்த ஐஎப்எஸ் நிதி நிறுவன ஊழியர் ஜெகநாதன்(வயது 34) பொருளாதார குற்ற பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சில மாதங்கள் சிறையில் இருந்தார்.

தற்போது, அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெகநாதன் தனது சொந்த வீட்டிற்கு வந்து செல்வதாகக் கிடைத்த தகவலின் பேரில், அவரிடம் முதலீடு செய்தவர்கள் 50-க்கும் மேற்பட்டோர், அவர் வீட்டின் முன்பு குவிந்தனர். அப்போது ஆவேசமடைந்த சயனபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன்(35), தீரன்(33) இருவரும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.அவர்களை, நெமிலி போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று காலை 8 மணிக்கு திடீரென 2 கார்களில் சென்னை அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலகத்தில் இருந்து, 8 பேர் கொண்ட குழு ஜெகநாதன் வீட்டில் உள் பக்கமாக கதவை சாற்றிக்கொண்டு, இரவு 8 மணி வரை சோதனை செய்தனர். 12 மணி நேர சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு, பல்வேறு ஆவணங்களை கட்டு கட்டாக அட்டை பெட்டியில் எடுத்து சென்றனர்.இதையறிந்த, பொதுமக்கள் அங்கு கும்பல் கும்பலாக குவியதத் தொடங்கினர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் நெமிலி பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க: கலாஷேத்ரா பாலியல் வழக்கு: பேராசிரியர் ஹரிபத்மன் புழல் சிறையில் அடைப்பு!

Last Updated : Apr 4, 2023, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.