ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைக்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காகப் பல இடங்களில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் குழிகள் தோண்டப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த எமனேஸ்வரத்தைச் சேர்ந்த சோனை முத்து என்பவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து பரமக்குடி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜகவின் பாவச்செயல்களுக்கு அதிமுக பலியாக நேரிடும் - திருமா எச்சரிக்கை