ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கல்கிணற்று வலசையைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகன் தேவா (24). இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்த நிலையில், இரவு நம்பியான் வலசை கிராமம் அருகே தேவா நடந்துசென்றுள்ளார்.
அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து கொலை செய்ததுடன், உடலை நம்பியான் வலசை கிராமத்திலும், தலையை புதுமடம் விலக்கு தாமரைக்குளம் சாலையிலும் வீசி சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும், உச்சிப்புளி காவல் துறையினர் தேவாவின் உடலையும், தலையையும் கைப்பற்றி, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தும் வந்தனர். இந்நிலையில் திருப்புவனம் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 31) இந்தக் கொலை தொடர்பாக உச்சிப்புளியைச் சார்ந்த கணேசமூர்த்தி, விஜய், தினேஷ், மணிமாறன், ராமநாதபுரத்தைச் சார்ந்த திருஞானம் என ஐந்து இளைஞர்கள் சரணடைந்தனர்.
இதையும் படிங்க: நாட்டு வெடிகுண்டு கடித்து பசு மாடு உயிருக்குப் போராட்டம்!