ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான். இவரது மகன் சதாம் உசேன். மதுவிற்கு அடிமையான சதாம் உசேன் கடந்த மாதம் ஏப்ரல் 26ஆம் தேதி தனது நண்பர்களுடன் சென்று திணையத்தூர் கிராமத்தில் உள்ள மருந்து கடையில் போதைக்காக தூக்க மாத்திரைகள் வாங்கி, அதிகமாக சாப்பிட்டு மயக்கமடைந்தார்.
இதனையடுத்து உடனிருந்த நண்பர்கள் அவரை சிகிச்சைக்காக தொண்டி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு சிகிச்சைபெற்று வந்த சதாம் உசேன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து தொண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சரவணன், மருந்து கடை உரிமையாளர் பிரபு உள்பட மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இதையும் படிங்க: போதை அடிமைகளை மீட்டெடுக்க களம்காணும் சமூக வலைதள ஜாம்பவான்கள்!