ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த மேலச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் தனது மனைவி தாய் மூகாம்பிகையுடன் அவரது உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். திருமணம் முடிந்து மதுரைக்குத் திரும்பிச் செல்லும் பொழுது முதுகுளத்தூர் காவல் நிலையம் அருகிலுள்ள வேகத்தடையில் சென்றபோது நிலை தடுமாறி தாய் மூகாம்பிகை கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனையடுத்து, காயமடைந்த பெண்ணை முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து முதுகுளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நிகழ்ச்சிக்கு வந்து சென்றுவிட்டுத் திரும்பும் பொழுது பெண் உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இரண்டாம் அலை தொடர்பாக மருத்துவர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை