ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இரவு நேரத்தில் ரோந்து பணியில் சார்பு ஆய்வாளர்கள் நந்தகுமார், ஜெயபாண்டியன் இருந்துள்ளனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில், திடீரென்று ஆய்வாளர்களை நோக்கி ஓடி வந்த அடையாளம் தெரியாத நபர், கட்டையால் தாக்க முயன்றார். இதனையடுத்து காவல் துறையினர் ஏற்கனவே விசாரித்துக்கொண்டிருந்த இரண்டு நபர்களும் இந்த சூழலை பயன்படுத்தி ஆய்வாளர்களை சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து, பலத்த காயம் அடைந்த ஆய்வாளர்கள் மருத்துவச் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண்குமார் இருவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து எஸ்.பி. கூறுகையில், "தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தாக்குதல் நடத்திய நபர்களை தேடி வருகிறோம்" என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வாக்குப் பெட்டியுடன் ஓட முயன்ற அதிமுக வேட்பாளர் - சிசிடிவி காட்சி!