ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப் சேவியர். இவர் ராமேஸ்வரத்தில் உடல் பயிற்சிக்கூடம் நடத்திவந்தார். இந்நிலையில் இன்று (மார்ச் 29) உடல் பயிற்சிக்கூடத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு, அவரது சகோதரியின் மகள் கீர்த்தி சஞ்சய் உடன் இருசக்கர வாகனத்தில் ராமேஸ்வரத்திற்குத் திரும்பி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, மண்டபம் அருகே சுந்தரமுடையான் கிராமம் அருகில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த ஜோசப் சேவியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த கீர்த்தி சஞ்சய் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து உச்சிப்புளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வத்தலகுண்டு வேன் விபத்து: 5 பேர் உயிரிழப்பு