ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வேப்பங்குளம் கிராமத்தில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி கஞ்சா விற்ற, முத்து அரியப்பன் மனைவி வில்லம்மாள், உருவாட்டி மனைவி பாண்டியம்மாள் ஆகிய இருவரை கமுதி காவல் துறையினர் கைதுசெய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவரும் இந்தப் பெண்களின் செயல்களைத் தடுக்கும்பொருட்டு, அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரைத்தார்.
இந்தப் பரிந்துரையை ஏற்று, கஞ்சா விற்ற இரண்டு பெண்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதன்படி கமுதி காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ், வில்லம்மாள், பாண்டியம்மாள் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.