ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட குடிமை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறைக்கு தகவல் சென்றது.
இதையடுத்து, அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட ராமநாதபுரம் குடிமை பொருள் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் காமாட்சி நாதன் தலைமையிலான காவலர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் பதுக்கி வைத்திருந்த இரண்டு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
மேலும், ரேஷன் அரிசியை பதுக்கிவைத்து கடத்திய புனவாசல் கிராமத்தை சேர்ந்த வள்ளி, அவரது மகள் முனீஸ்வரி ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை கடலாடி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் வாகனம் மூலம் கொண்டுசென்று ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: 'கஞ்சா விற்றால் கடும் நடவடிக்கை - மாவட்ட எஸ்பி தகவல்'