ETV Bharat / state

ராமநாதபுரத்தில் 2 இடங்களில் தற்காலிக சந்தை: ஆட்சியர் தகவல்!

ராமநாதபுரம்: கரோனா பரவலைத் தடுக்க 2 இடங்களில் தற்காலிகச் சந்தை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

author img

By

Published : May 6, 2021, 10:53 PM IST

Collector Dinesh Bonraj Oliver
ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்த்திடும் நோக்கில், மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சந்தைகள், காய்கறி, பழக்கடைகளில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்து சிரமமின்றி தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்ல ஏதுவாக, ராமநாதபுரம் நகரில் பழைய பேருந்து நிலைய வளாகம், ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானம் ஆகிய 2 இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நகரின் பிற பகுதிகளில் காய்கறி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் செயல்பட அனுமதியில்லை. மாவட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலும் தற்காலிக கடைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கடைகள் இன்று (மே.7) முதல் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும். பொதுமக்கள் வெளியே செல்லும் போது கூட்டமாகக் கூடாமல், சமூக இடைவெளியை கடைபிடித்து கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவறான மருத்துவத்தால் உயிரிழந்த பெண்ணின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.