காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வருடா வருடம் ‘பேரறிஞர் அண்ணா’ பதக்கம் வழங்கப்படுகிறது. இந்தாண்டில், 100 காவலர்களுக்கு அண்ணா பதக்கத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதில், இரண்டு பேர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவல்துறை அலுவலர்களாவர்.
அதில், ஒருவர் ராமநாதபுரம் கடலோர காவல் பாதுகாப்புக் குழும கூடுதல் கண்காணிப்பாளர் ஏ. இளங்கோ. மற்றொருவர் ராமநாதபுரம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஏ. லிங்க பாண்டியன்.