ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூர் கடற்கரையில் முன்னோர்களுக்குத் திதி கொடுக்க, அருப்புக்கோட்டையில் இருந்து 60 பேர் பேருந்தில் சென்றனர். இதையடுத்து அவர்கள் திதி கொடுத்த பிறகு கடலில் மூழ்கி குளித்தனர்.
இதில் அருப்புக்கோட்டை திருநகரம் ராஜகுரு (43), வெள்ளக்கோட்டை கார்த்திகேயன் (55) ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திதி கொடுக்க வந்த இருவர் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு