ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கமுதி, கடலாடி, ராமநாதபுரம் நகரப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மழையுடன் சேர்ந்து சூறைக் காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் 5க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. அதேபோன்று அம்பேத்கர் தெருவில் 50 ஆண்டுகள் பழமையான மரம் சாய்ந்ததில் மூன்று வீடுகளின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்து.
மேலும் ஒரு வீடு முற்றிலுமாக தரைமட்டமாகி கற்களால் அடைபட்டது. இதனால் அதில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து ஊழியர்கள் வந்து கற்களை அகற்றும் பணியை செய்து வருகின்றனர்.
மேலும், நடப்பு மாதத்தில் பெய்த கனமழையில் இதுவரை 42 வீடுகள் பகுதியாகவும், 13 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.