ETV Bharat / state

ராமநாதபுரத்தில் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது! - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம்: தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

two-arrested-in-ramanathapuram-under-goondas-act

author img

By

Published : Feb 19, 2021, 7:24 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் மேலத்தூவல் பகுதியைச் சேர்ந்த வில்வநாதன், முத்துப்பாண்டி ஆகிய இருவரும் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த வழக்கில் முதுகுளத்தூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீது பல்வேறு திருட்டு, கொலை முயற்சி வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இருவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்.

இதன்படி முதுகுளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன், குற்றவாளிகள் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.

இதையும் படிங்க: பிகாரில் 1,058 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.