ராமநாதபுரம் தொகுதி அமமுக வேட்பாளர் முனியசாமியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "மீனவர்கள், விவசாயிகள் அரசு ஊழியர்கள், ஏழை எளிய மக்களை காக்கவும் தீய, துரோக சக்திகளை ஒழிக்கவும் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமையவும் அமமுகவிற்கு உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.
மீனவர்களுக்கு நீல புரட்சி திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான தொகை 3 லட்ச ரூபாயாக உயர்த்தி தரப்படும். கடல் அட்டை மீதான தடையை நீக்க தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மீனவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் சமமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.