ETV Bharat / state

களையிழந்த தீபாவளி: வெறிச்சோடிய ஜவுளிக்கடை வீதிகள்! - வெறிச்சோடிய ஜவுளிக்கடை வீதிகள்

ராமநாதபுரம்: கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

diwali
diwali
author img

By

Published : Nov 10, 2020, 2:48 PM IST

தீபாவளி என்றாலே துணிக்கடை, நகைக்கடை, இனிப்புக்கடை மற்றும் நடைமேடையில் அமைந்துள்ள சிறிய கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். கரோனா தொற்று குறையத் தொடங்கியதால், தமிழ்நாடு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. தீபாவளி பண்டிகையையொட்டி கட்டுப்பாட்டு விதிகளுடன் வணிக நிறுவனங்கள் திறக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் மக்கள் தீபாவளிக்கு பத்து நாள்களுக்கு முன்னரே குடும்பத்துடன் வந்து புத்தாடை, பட்டாசு, மளிகை பொருள்கள், இனிப்புகளை வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதற்கு மாறாக மக்களின் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது.

மற்ற ஆண்டுகளை போல் தீபாவளி பண்டிகைக்கு ஆரம்பத்தில் சூடுபிடித்த நிலையில், கடந்த சில நாள்களாக டல் அடிப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஒரு பக்கம் மக்களை அச்சுறுத்தும் கரோனா தொற்று போன்ற காரணத்தினால் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. கரோனா கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதளவில் பாதிப்படைய வைத்துள்ளது.

"மக்கள் இனிப்புகள் வாங்க யோசிக்கின்றனர். அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் வகை, வகையான இனிப்புகளை தயாரித்தாலும் மக்களிடம் வாங்கும் ஆர்வமில்லை. கடந்த ஆண்டை விட இந்த வருடம் புத்தாடை, பட்டாசு அத்தியாவசிய பொருட்டுகளில் தீபாவளி வியாபாரம் மொத்தமாக 40 முதல் 50 விழுக்காடே தீபாவளி விற்பனை நடைபெறும்" என்று பேக்கரி கடையில் பணியாற்றும் சித்ரா என்பவர் தெரிவித்தார்.

வெறிச்சோடி கிடக்கும் கடை வீதி
வெறிச்சோடி கிடக்கும் கடை வீதி

வர்த்தக சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ஜெகதீசன் கூறுகையில், "எப்போதும் தீபாவளிக்கு இரு வாரங்களுக்கு முன்பே விற்பனை தொடங்கி வேகமாக நடைபெறும்.

ஆனால், தற்போது தீபாவளிக்கு நான்கு நாள்கள் கூட இல்லை. 30 முதல் 40 விழுக்காடு வரை மட்டுமே வியாபாரம் நடைபெற்றுள்ளது.

மக்களிடையே அச்சம் இருந்தாலும் பொருளாதார ரீதியில் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி விற்பனை குறைவதற்கான மிக முக்கிய மற்றொரு காரணம்" என்றார்.

களையிழந்த தீபாவளி

மனநல மருத்துவர் பெரியார் லெனின் கூறியதாவது, "தளர்வுகள் பொருளாதாரத்தை உயர்த்த மட்டுமே தனி மனிதர்களுக்கு தளர்வுகள் இன்னும் கொடுக்கப்படவில்லை.

முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதை மக்கள் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: பாம்பன் பாலத்தில் ராட்சத கிரேன் மோதி விபத்து - ரயில் போக்குவரத்து பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.