கரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக ராமநாதபுரம் மாவட்டம் கடைக்கோடியில் உள்ள தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
இதன் காரணமாக அப்பகுதியில் உணவகம், சிப்பி மூலம் செய்யப்பட்ட கலை பொருட்கள் உள்ளிட்ட சிறு சிறு வியாபாரம் செய்து வந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர்.
ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டபோது பல்வேறு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்ட போதிலும், தனுஷ்கோடிக்கு தொடர்ந்து தடை நீடித்து வந்தது. இதனை நீக்கக்கோரி அப்பகுதியில் உள்ள மீனவர்கள், வியாபாரிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்நிலையில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று (டிச.23) முதல் தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என்று அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து அரிச்சல்முனை வரை சென்று கடல் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 9 மாதங்களுக்குப்பின் முன்பதிவை தொடங்கிய ஆனைமலை டாப் சிலிப்!