ETV Bharat / state

கருணாநிதி பிறந்தநாளன்று ரூ.4,000 வழங்கப்படும்! - மு.க.ஸ்டாலின் - திமுக

ராமநாதபுரம்: கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

stalin
stalin
author img

By

Published : Mar 22, 2021, 10:01 PM IST

Updated : Mar 22, 2021, 10:34 PM IST

ராமநாதபுரம் அரண்மனை முன்பு ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் ஏழு வாக்குறுதிகளை அளித்தேன். அவற்றை அடுத்து வரும் 10 ஆண்டு கால திமுக ஆட்சியில் நிறைவேற்றுவேன். ஏனென்றால் தற்போதுள்ள அதிமுக ஆட்சியால், தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எனவே, அடுத்து வரும் நம் ஆட்சியில் மீனவர்கள் வலைகள் வாங்க 50% மானியம் வழங்கப்படும். படகுகளுக்கு 2,000 லிட்டர் டீசல், மீனவ சமுதாய மக்கள் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். மீனவர்களுக்காக 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். கரோனா கால இழப்பீடாக 4,000 ரூபாய், கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதி வழங்கப்படும்” என்றார்.

கருணாநிதி பிறந்தநாளன்று ரூ.4,000 வழங்கப்படும்! - மு.க.ஸ்டாலின்

இதையும் படிங்க: கரோனா காலத்தில் வெறும் ரூ.1000 கொடுத்து வஞ்சித்தவர்கள் அதிமுக - மமக வேட்பாளர் தாக்கு

Last Updated : Mar 22, 2021, 10:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.