ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி அம்மாவட்டத்தில் 803 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனை மற்றும் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இரண்டு ஆண்கள், 70 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துவுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனாவுக்கு சரியாக சிகிச்சையளிக்காத மதுரை அரசு மருத்துவமனை?' - கதறிய நபர்!