ETV Bharat / state

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ - வாழும் கஜினி முகமதுவின் அரசியல் பயணம்

நரைகூடி கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றக்கிரையென மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற முண்டாசு கவியின் வரிகள் முண்டாசு மணிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
author img

By

Published : Mar 20, 2021, 2:49 PM IST

Updated : Mar 20, 2021, 3:04 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் பானை மணி. நேற்று தலையில் முண்டாசு கட்டி பானையைச் சுமந்துகொண்டே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தன்னந்தனியாகப் படையெடுத்த இவர் திருவாடானை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்தார். 68 வயதான இவருக்கு இது 19ஆவது அனுபவம்.

வாழும் கஜினி முகமதுவின் அரசியல் பயணம்

வாழும் கஜினி முகமது

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நான்கு முறை, இளையான்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்று முறை, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தேர்தல், திருப்பத்தூர், திருச்செந்தூர் இடைத்தேர்தல், சிவகங்கை மக்களவைத் தேர்தல், ராமநாதபுரம் நகராட்சித் தேர்தல் என இதுவரை மொத்தம் 18 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியை மட்டுமே சந்தித்தாலும் சலிப்படையாத பானை மணியை நிகழ்கால கஜினி முகமது என்றே சொல்லலாம்.

போரில் 18 முறை தோல்வியைக் கண்டு 19ஆவது முறையாக வென்ற கஜினி முகமதுவைப்போல இந்தத் தேர்தலில் நான் வெற்றிபெறுவேன் என்று வீர வசனம் பேசுகிறார் 68 வயது முதியவர் பானை மணி.

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

நரைகூடி கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றக்கிரையென மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற முண்டாசு கவியின் வரிகள் முண்டாசு மணிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.

போட்டியில் வெற்றி, தோல்வி என்பது இரண்டாவது பட்சம். பங்கேற்பைச் செலுத்துவதே பாதி வெற்றிக்குச் சமம் என்று இக்கால இளைஞர்களுக்குப் பாடம் புகட்டுகிறார் பானை மணி.

Last Updated : Mar 20, 2021, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.