ETV Bharat / state

கரோனாவால் இறந்தவர் உடலை எடுத்துச் சென்ற அரசு அமரர் ஊர்தி மீது தாக்குதல்! - Government Ambluance carrying the body of the deceased by Corona

ராமநாதபுரம்: கரோனாவால் இறந்தவர் உடலை எடுத்துச்சென்ற அரசு அமரர் ஊர்தியை மதுபோதையில் கல்லால் அடித்து நொறுக்கிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

 இறந்தவர் உடலை எடுத்துச் சென்ற அரசு அமரர் ஊர்தி

author img

By

Published : Jun 16, 2021, 4:53 PM IST

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தேவிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கரோனா தொற்று பாதித்து சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை அரசு மருத்துவமனை அமரர் ஊர்தியில் பரமக்குடி கார்த்திக் என்பவர் எடுத்துக்கொண்டு ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் சென்றபோது அங்கு கையில் கத்தியுடன் இளைஞர் ஒருவர் நின்ற வாகனத்தை நிறுத்துமாறு கூறினார். கையில் கத்தியுடன் நின்றதால் வாகனத்தை நிறுத்தாமல் செல்ல முயன்றபோது அந்த இளைஞர் பெரிய கல்லை எடுத்து வீசியதில் காரின் முன்பக்க கண்ணாடி சேதமானது. வாகனத்தை நிறுத்தியபோது அந்த நபர் ஓடிவிட்டார்.

இதைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த உடலை மற்றொரு வாகனத்தை வரவழைத்து அனுப்பி வைக்கப்பட்டது. ஓட்டுநர் கார்த்திக் அளித்த புகாரில் கேணிக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.