பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் உயர்த்தி ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இரு சக்கர வாகனத்திற்கு மலர்வளையம் வைத்து நூதன முறையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் ஏ. அசோக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலைஉயர்வைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.