ETV Bharat / state

மண்டபம் கடற்கரையில் உயிருடன் கரையொதுங்கிய பெருந்தலை ஆமை!

கடல் சீற்றம் காரணமாக மண்டபம் கடற்கரைப் பகுதியில் உயிருடன் கரையொதுங்கிய பெருந்தலை ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது.

giant tortoise
giant tortoise
author img

By

Published : Oct 12, 2020, 8:25 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாள்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று (அக்.12) மண்டபம் கடற்கரைப் பகுதியில், அரிய வகையான பெருந்தலை ஆமை உயிருடன் கரை ஒதுங்கி இருந்தது.

இது குறித்து, மண்டபம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மண்டபம் வன உயிரின சரகம் வேட்டைத் தடுப்பு வனக்காப்பாளர், காவலர்கள் 100 கிலோ எடையுள்ள பெருந்தலை ஆமையை மீட்டு, மீனவர்கள் உதவியுடன் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.

இதேபோல் நேற்று பனைகுளம் பகுதியில் மீனவர் வலையில் சீக்கிய ஆமை மீண்டும் கடலில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மருத்துவர்கள் பற்றாக்குறையை கண்டித்து திமுகவினர் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.