ராமநாதபுரம்: நம்புதாளை பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் 2019ஆம் ஆண்டு ஓமன் நாட்டிற்கு மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமாகினர். அதில் கார்மேகம், இராமநாதன் என்ற இருவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற இருவரின் உடல்கள் மீட்கப்படாததால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.
இது குறித்து கணவனை இழந்த பெண் கூறுகையில்,
“மீனவர் நலவாரியத்திலிருந்து நான்கு குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே உதவித் தொகை கிடைக்கப்பெற்றது. இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்படாததால் இறப்புச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிக்கின்றது.
இது குறித்து தற்போது உள்ள மாவட்ட ஆட்சியர் கவனம்கூர்ந்து கணவரை இழந்த நான்கு பெண்களின் வாழ்வாதாரத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும் இன்று (ஜூன் 22) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம், மன்னார் வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் சார்பில், கணவனை இழந்த நான்கு மீனவப் பெண்கள் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: ’பீஸ்ட் மோடுலேயே இருங்க’ - விஜய்யை வாழ்த்திய தனுஷ்