ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சபின் பர்சாத் என்பவர் அறை எடுத்து தங்கியுள்ளார். கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து அறையை திறக்காத காரணத்தால் சந்தேகமடைந்த தங்கும் விடுதியின் ஊழியர் ஒருவர் அறையை திறந்து பார்த்தபோது அதிர்ந்து போனார்.
அந்த அறைக்குள் கயிற்றால் கழுத்தில் தூக்கிட்ட நிலையில் சபின் பர்சாத் சடலமாகத் தொங்கியுள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏர்வாடி காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர் குறித்த விளக்கத்தினை தங்கும் விடுதி உரிமையாளரிடம் கேட்டபோது, சரியான அடையாள அட்டை வழங்கவில்லை என்றும், வங்கியின் பான் கார்டு ஒன்று உள்ளது என்று அதை வழங்கியுள்ளார். இதையடுத்து காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் கடன் மோசடி: சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட 1,600 சிம் கார்டுகள்