ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசு மருத்துவமனைகளுக்கும் உதவும் வகையில் ராமநாதபுரத்தில் உள்ள பிரபல தனியார் ஜவுளி நிறுவனம் சார்பில், 36 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டன.
சுமார் 25.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்தக் கருவிகளை, அதன் உரிமையாளர்கள், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வழங்கினர்.
இந்தக் கருவியானது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அத்தனியார் நிறுவன உரிமையாளர் தெரிவித்தார்.