ETV Bharat / state

ராமநாதபுரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

ராமநாதபுரம்: பாம்பன் பாலம் கட்டுமான ஊழியர்களுக்கு கரோனா ஏற்பட்டதையடுத்து, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், சிவகங்கை மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.

பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு
author img

By

Published : May 20, 2021, 3:03 PM IST

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் அறிவுரையின்படி, மாவட்டத்தின் மண்டபம் பேரூராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நேற்று (மே.19) சிவகங்கை மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் மாடசாமி சுந்தர்ராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மண்டபம் பேரூராட்சி பகுதியில் உள்ள புதிய பாம்பன் பாலம் கட்டும் ’ரஞ்சித் பில்டிங்’ நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் தங்கும் முகாமில் இருபதுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த முகாம் தனிமைப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகாமில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட உதவி இயக்குநர் மாடசாமி சுந்தர்ராஜன், மண்டபம் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள கிருமிநாசினி தெளிக்கும் பணி, கரோனா குறித்து பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, இளநிலை உதவியாளர் முனியசாமி உள்ளிட்டோரும் பேரூராட்சிப் பணியாளர்களும் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: குறைக்கப்பட்ட கரோனா பரிசோதனைக் கட்டணம்: எவ்வளவு தெரியுமா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.