ETV Bharat / state

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம்! - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

இராமநாதபுரம்: மத்திய அரசின் பல்வேறு சட்டங்களை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமை தபால் நிலையத்திதை முற்றுகையிட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
author img

By

Published : Oct 12, 2020, 12:34 PM IST

மத்திய அரசின் விவசாயிகள் திருத்தச்சட்டம், தொழிலாளர்கள் திருத்தச்சட்டம், நீட்தேர்வு உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முருகபூபதியின் தலைமையில் போராட்டக்காரர்கள் அரண்மனை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.

அப்போது காவல்துறையினர் அவர்களை தபால் நிலையம் வெளியே தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் விவசாயிகள் திருத்தச்சட்டம், தொழிலாளர்கள் திருத்தச்சட்டம் உள்ளிட்ட சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: குண்டும் குழியுமாக மாறிய சாலையை சீர் செய்யக்கோரி நாற்று நடும் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.