ETV Bharat / state

'குழந்தைத் திருமணத்தை ஏற்பாடு செய்வோர் மீது கடும் நடவடிக்கை'

குழந்தைத் திருமணத்தை ஏற்பாடு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
author img

By

Published : Jun 29, 2021, 7:03 AM IST

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இம்மாவட்டத்தில் சமூகநல அலுவலர், சைல்டு லைன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தை நலக்குழு ஆகியோர் ஒருங்கிணைந்து 'குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் 2006' இன்கீழ் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்த மாதத்தில் மட்டும் பரமக்குடி, நயினார் கோவில், கமுதி, கீழக்கரை, திருப்புல்லாணி ஆகிய வட்டாரங்களிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பொது காவல் நிலையங்களில் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக மொத்தம் ஆறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

இவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்படும் நபர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பிணையில் வெளிவர முடியாத கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கிடச் சட்டத்தின் மூலம் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், "மாவட்டத்தில் உள்ள கிராம ஊர்த் தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், சமூக அளவிலான சங்கங்கள், ஜமாத் தலைவர்கள் உள்பட தன்னார்வலர்கள் அனைவரும் குழந்தைத் திருமணம் தடுப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்" என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், "குழந்தைத் திருமணம் என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, குழந்தைத் திருமணங்களை நடத்தும் பெற்றோர், மணமகன் அல்லது மணமகள் வீட்டார், திருமணத்திற்கு உறுதுணையாக இருப்பவர்கள் அனைவர் மீதும் மேற்குறிப்பிட்டுள்ள சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

குழந்தைத் திருமணம் தொடர்பான தகவல்களை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கல்குவாரி குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.