இராமநாதபுரம் : தமிழ்நாட்டில் வரயிருக்கின்ற 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சார் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம் அக்கட்சி அலுவலகத்தில் வைத்து அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கட்சியை வழிநடத்த, 11 பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று (அக்.8) இராமநாதபுரம் நகர் பகுதியில், முதலமைச்சர் பழனிசாமியை புகழ்ந்தும், திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அந்த சுவரொட்டியில், செயல் நாயகனா? அறிக்கை நாயகனா? மண்ணின் மைந்தனா? உளறல் மன்னனா? என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தச் சுவரொட்டிகளை திமுகவினர் கிழித்து எறிந்தனர்.
இந்த விவகாரம் குறித்து, இராமநாதபுரம் திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மனோகரன் ராமநாதபுரம் டிஎஸ்பியிடம் புகார் மனு அளித்தார். அதில், திமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், கலவரத்தை தூண்டும் விதமாக சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கைகள எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க : பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்