ETV Bharat / state

தடைசெய்யப்பட்ட மாத்திரை அரசு மருத்துவமனையில் விநியோகம்! அதிர்ச்சிகர தகவல் - pin in medicine

ராமநாதபுரம்: ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், தடை செய்யப்பட்ட சிப்ரோஃப்லோசின்(ciprofloxacin) மாத்திரையை செவிலியரால் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Stable pin
author img

By

Published : Jun 8, 2019, 7:56 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வேளாண்துறை கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது மனைவி சக்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஏர்வாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு மருத்துவர் இல்லாததால் மருத்துவமனையில் இருந்த செவிலியர், சக்திக்கு சிப்ரோஃப்லோசின் மாத்திரையை வழங்கியுள்ளனர்.

இந்த சிப்ரோஃப்லோசின் மாத்திரையை பெற்றுக்கொண்ட சக்தி, வீட்டிற்கு சென்றதும் தொண்டைப் புண் காரணத்தால் மாத்திரையை முழுவதுமாக சாப்பிட முடியாமல் இரண்டாக உடைத்துள்ளார். அதில் கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அருகில் இருந்த நபர்களிடம் இதுகுறித்து கூறியதையடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாத்திரையை உடைக்காமல் சக்தி சாப்பிட்டிருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும், சுகாதாரத்துறை இது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாத்திரையில் கம்பி, அதிர்ச்சியில் பொதுமக்கள்

ஆனால், பையோஜெனிடிக் நிறுவனத்தின் சிப்ரோஃப்லோசின் என்ற மாத்திரை, தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனம் மூலமாக, மாத்திரையின் தரத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி கடந்த மார்ச் 7ஆம் தேதி முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி வரை தடை செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஏர்வாடி அரசு சுகாதார நிலையத்தில் சிப்ரோஃப்லோசின் மாத்திரை எப்படி வந்தது என்றும், அந்த மாத்திரை தடை செய்யப்பட்டிருப்பது குறித்த தகவல் முறையாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படவில்லையா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், மக்கள் உயிர் சம்பந்தப்பட்ட இதுபோன்ற விஷயங்களில் அரசு அலட்சியமாக இருப்பது, மக்கள் மத்தியில் அரசு மருத்துவமனை மீது உள்ள நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்குகிறது.

Intro:இராமநாதபுரம்
ஜூன்.8
அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மாத்திரையில் ஸ்டேப்ளர் பின் இருந்ததால் மக்கள் அதிர்ச்சி.

Body:ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வேளாண் துறை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி அவரது மனைவி சக்தி 48 வயது இவர் உடல் நலக் குறைவு காரணமாக ஏர்வாடி அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றார். அப்பொழுது அங்கு மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் செவிலியர்களுக்கு மாத்திரை வழங்கினர்.
மாத்திரையை பெற்றுக்கொண்டு சக்தி வீட்டுக்கு சென்று மாத்திரை தொண்டைப் புண் காரணமாக இரண்டாக உடைத்து விழுங்க முற்பட்டபோது மாத்திரையின் ஸ்டேப்ளர் பின் இருப்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதை அருகில் தெரியப்படுத்தினார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாத்திரையை உடைக்காமல் அவர் விழுங்கியிருந்தாள் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சுகாதாரத்துறை இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.