ETV Bharat / state

விசைப்படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல் - உயிர் தப்பிய 6 தமிழ்நாட்டு மீனவர்கள்

ராமேஸ்வரம் விசைப்படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதியதால், விசைப் படகுகள் நல்வாய்ப்பாக 6 மீனவர்கள் உயிர் தப்பினர்.

srilankan navy boat hit rameshwaram fisher men boats  srilankan navy boat hit rameshwaram boat  fishermen  rameshwaram fishermen  விசைப்படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல்  மீனவர்கள்  மீனவர்கள் வேதணை  உயிர் தப்பிய மீனவர்கள்  இலங்கை கடற்படை
உயிர் தப்பிய 6 மீனவர்கள்
author img

By

Published : Aug 22, 2021, 8:20 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து இன்று காலை மீன்பிடிப்பதற்காக 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கிங்ஷன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மீனவர் விசைப்படகு மீது நேரடியாக மோதியதாகக் கூறப்படுகிறது.

உயிர் தப்பிய மீனவர்கள்

இதில் விசைப் படகு சேதமடைந்ததால் கிங்ஷன், ஜேசு, மெக்கான்ஸ், குமார், ஸ்டோபன், ஹேர்ஷன் உள்ளிட்ட 6 மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். இதையடுத்து உயிர் பிழைத்த 6 மீனவர்களும் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கரை சேர்ந்தனர்.

உயிர் தப்பிய 6 மீனவர்கள்

இலங்கை கடற்படை மோதியதில், விசைப்படகு சேதமடைந்ததால், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த விசைப்படகின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் 3 உணவகங்களுக்கு ரூ.52 ஆயிரம் அபராதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.