இலங்கை யாழ்பாணத்தில் அந்நாட்டு மீனவர்கள் இன்று இந்திய மீனவர்கள் சட்ட விரோதமாக இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து கடல் வளங்களை அழிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை நேரில் சந்தித்த இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா "மீனவர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்த ஆண்டுக்குள் இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை நிறுத்துவதற்கு இந்திய தூதரகம் மூலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கண்டிப்பாக இந்திய மீனவர்களின் மீன்பிடி நிறுத்தப்படும் என்று மீனவர்கள் மத்தியில் உறுதியளித்தார். மேலும் இலங்கை பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத மீன் பிடிக்கும் முறையை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இலங்கை மீன்வளத்துறை அமைச்சரின் இந்தப் பேச்சு இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் உண்ணாவிரதம்!