ETV Bharat / state

'மக்களின் எதிர்காலம் குறித்து திராவிட கட்சிகளுக்கு கவலை இல்லை' - சீமானுடன் சிறப்பு நேர்காணல்

author img

By

Published : Mar 19, 2021, 6:23 PM IST

மக்களின் எதிர்காலம் குறித்து திராவிட கட்சிகளுக்கு கவலை இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமானுடன்  ஈடிவி பாரத்தின் சிறப்பு நேர்காணல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இதற்கிடையில் ஈடிவி பாரத் செய்தித் தளத்திற்குப் பிரத்யேகப் பேட்டியளித்த அவரிடம் பல கேள்விகள் தொடுக்கப்பட்டன. அந்தக் கேள்விகளையும் பதில்களையும் காண்போம்.

கேள்வி: மக்கள் மத்தியில் உங்களுக்கான ஆதரவு எப்படி உள்ளது?

பதில்: மக்கள் எங்களுக்குப் பேராதரவு அளிக்கின்றனர். 2016, 2019ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்ததைவிட இந்தத் தேர்தலில் மிகப்பெரிய எழுச்சியைப் பார்க்கிறோம். அதனால் எங்களுக்கு வெற்றி உறுதி.

கேள்வி: திராவிடக் கட்சிகளை ஒப்பிடுகையில் உங்களுக்கு எழுச்சி எப்படி இருக்கிறது?

பதில்: மற்ற கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் கூட்டங்களில் பங்கேற்பதற்குப் பணம் வழங்குகின்றனர். ஆனால் நாங்கள் அதைச் செய்யவில்லை. எங்கள் கூட்டத்தில் தன்னெழுச்சியாக மக்கள் கலந்துகொள்கின்றனர். மக்கள் மாற்றத்தை நோக்கி நகர நினைக்கிறார்கள்.

கேள்வி: பனை வளர்ப்பு, ஆடு, மாடு மேய்ப்பது அரசுப் பணியாக்கப்படும் என்ற உங்களின் அறிவிப்பை சிலர் கிண்டல் செய்கின்றனர். அதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: கேலி, கிண்டல் செய்பவர்கள் உணவு உண்ணாமல், பால் குடிக்காமல், நெய் சாப்பிடாமல் இருக்க வேண்டும். படித்தவன் விவசாயம் செய்யக் கூடாது என்றால் அவன் ஏன் சாப்பிட வேண்டும். கேலி, கிண்டல் செய்து விட்டு நான் சொன்னதை எல்லோரும், ஏன் தேர்தல் அறிக்கையில் கொண்டுவந்துள்ளீர்கள். திமுக தலைவர் ஸ்டாலின் பனை வேளாண் வையுங்கள் நான் மானியம் தருகிறேன் என்கிறார். இதைத்தான் நான் சொன்னேன். அம்பானி, அதானி ஆகியோர் நம்முடைய நிலத்தை எடுத்துக் கொண்டு கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாயம் செய்யத் தொடங்குவதற்கு முன்பாக அரசாங்கம் நுழைய வேண்டும் என்று கூறுகிறேன்.

கேள்வி: ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் மாட்டு வண்டியில் மணல் அள்ளலாம் என்று செந்தில் பாலாஜி பேசியதற்கு உங்களின் கருத்து என்ன?

பதில்: அவர்கள் காலம் காலமாக வளங்களைச் சுரண்டி வாழ்பவர்கள். அதை ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் சொல்கிறார்கள். ஏற்கனவே 32 ஆறுகளை அழித்துவிட்டனர். மலைகளைக் குடைந்து மணலை அள்ளி பூமியைப் பாலைவனமாக மாற்றிவருகிறார்கள். இவர்களுக்கு மக்களைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டுவார்கள். பணம் மட்டும் முக்கியமில்லை என்பது கடைசியில்தான் புரியும்.

கேள்வி: ஏன் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?

பதில்: திமுக, அதிமுக சொல்வதையும் கேளுங்கள். நான் சொல்வதையும் கேளுங்கள். எது சரியாக இருக்கிறதோ அதை வாக்காகச் செலுத்துங்கள். திமுக அதிமுக ஏற்கனவே இருந்த கட்சிகள். நாங்கள் புதிய கட்சி மாற்றத்தை உருவாக்க விரும்புகிறோம். அதனால் எங்களுக்கு வாக்களியுங்கள்.

கேள்வி: நாம் தமிழர் கட்சி பெறும் வாக்கு திமுக அல்லது அதிமுகவுக்குச் சாதகமாக அமைந்து விடாதா?

எனக்கு வாக்களிக்க விரும்புவர்கள், எனக்குத்தான் வாக்களிப்பார்கள். திமுகவுக்கு வாக்களிக்க விரும்புவர்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள். இது ஒன்றும் சட்டைப் பையிலிருந்து பணத்தைத் திருடும் விஷயமல்ல. அப்படியாகச் சிந்திப்பது தவறு என்று கூறி விடைபெற்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.