ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அடுத்த இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் பூபதி. இவர் அஸ்ஸாம் மாநிலத்தில் ராணுவ வீரராகப் பணியாற்றி வந்தவர்.
இந்நிலையில் அவர், நேற்று கமுதி - பேரையூர் செல்லும் சாலையில் புதிதாக தான் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டின் கட்டடத்திற்கு தண்ணீர் அடிப்பதற்காக மின் மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், உடலை மீட்ட முதுகுளத்தூர் காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணுவ வீரர் விடுமுறைக்காக வந்த இடத்தில் மின்சாரம் தாக்கி, உயிரிழந்த நிகழ்வு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: மது அருந்திவிட்டு கண்மாய்க்கு குளிக்கச் சென்றவர் மூழ்கி பலி