ராமநாதபுரம்: அரசால் விற்பனைக்குத் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை கடத்துவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
இதனால் மாவட்ட, கடலோர காவல் துறையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, ரூ. 20 லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட சுறா பீலி (சுறா துடுப்பு), கடல் அட்டை, ஏலக்காய் ஆகியன சரக்கு வாகனத்தின் மூலம் கீழக்கரைக்கு நேற்று (ஜூன் 28) கடத்திக் கொண்டு வரப்பட்டன.
இதனையடுத்து கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், காயல்பட்டினத்தைச் சேர்ந்த சதாம் உசேன், கீழக்கரையைச் சேர்ந்த காசிம் முகம்மது உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்படி, இலங்கைக்கு கடத்துவதற்காக காயல்பட்டினம் குடோனில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 210 கிலோ சுறா பீலி, ரூ. 2.65 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஏடிஎம் கொள்ளை: கொள்ளையனை திருடச் சொல்லி வீடியோ எடுத்த காவல்துறை!