ETV Bharat / state

30 ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரத்தில் 2ஆம் போக சாகுபடி!

ராமநாதபுரம்: 30 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் போக சாகுபடி செய்ய வேளாண்துறை அலுவலர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் எடுத்த முயற்சி நல்ல பலனையும், விவசாயிகளிடம் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

second-crop-farming-ramanathapuram-done-after-30-year-with-initiative-of-collector-huge-cultivation
30 ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரத்தில் 2ஆம் போக சாகுபடி!
author img

By

Published : Jun 15, 2021, 8:57 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி மாவட்டம் என்ற கருத்தே பொதுவாக உள்ளது. ஆனால், அதிக நீர்நிலைகளைக் கொண்ட மாவட்டமாக ராமநாதபுரமே விளங்குகிறது. பொதுப்பணித்துறை கண்மாய்கள் 502, 1,192 சிறு, குறு கண்மாய்கள் என மாவட்டத்தில் மொத்தம்1,694 கண்மாய்கள் உள்ளன.

வடகிழக்குப் பருவமழையின் போது ராமநாதபுரம் மாவட்டத்தில், 563.45 மிமீ மழை பதிவானதால், மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 823 ஹெக்டேக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெற்றது. மேலும், வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதம் 284.74 மிமீ அளவு மழை பெய்ததால், நெற்பயிற்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இருப்பினும், இந்த மழையால் நீர்நிலைகளில் இருப்பு அதிகமானது.

கண்மாய்களின் நீர் இருப்பு

குறிப்பாக, பெரிய கண்மாயில் 3.6 அடிநீர், ஆர்எஸ் மஙகலம் கண்மாயில் 8 அடி நீர், களறி கண்மாய் 9.8 அடி நீர் என நீர் இருப்பு உயர்ந்தது. இந்த நீர் இருப்பைக் கணக்கில் கொண்டு மாவட்ட ஆட்சியர் வேளாண் அலுவலர்களுடன் இணைந்து தீட்டிய திட்டத்தால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்டத்தில் இரண்டு போக சாகுபடி நடைபெற்றுள்ளது.

30 ஆண்டுகளுக்கு பிறகு ராமநாதபுரத்தில் 2ஆம் போக சாகுபடி

குறுகியகாலப் பயிர்கள் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு கறுப்பு உளுந்து வம்பன்-8, வம்பன்-10 என்ற இரண்டு ரகங்களும், பருத்தி எம்சியூ 7, எல் விபி ஆர் 2 என்ற இரு ரகங்களும், எள் வகையில் டிஎம்வி7, விஆர் ஐ 3 என்ற ரகங்களும் 50 விழுக்காடு மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதற்குத் தேவையான உதவிகளை வேளாண்துறை அலுவலர்கள் செய்து வந்தனர்.

வேளாண்துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் இணைந்து செயல்படுத்திய இந்தத் திட்டத்தால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு போக சாகபடி செய்துள்ளதாக மகிழ்ச்சியடைகின்றனர் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள்.

second-crop-farming-ramanathapuram-succeed
விசாயிகளுடன் வேளாண் அலுவலர்கள்

விவசாயிகள் மகிழ்ச்சி

முதல்போக சாகுபடியுடன் கடந்த காலங்களில் விவசாயப் பணிகளை நிறுத்தி வந்த விவசாயி சிவகுமார், கஜேந்திரன் ஆகியோர் "தற்போது இரண்டாம் போக சாகுபடி செய்வதற்கு வேளாண்துறை அலுவலர்களின் ஒத்துழைப்பு மிக முக்கிய காரணம். விதைகளை 50 விழுக்காடு மானியத்துடன் கொடுத்தது போக பயிர்களை பாதுகாக்கத் தேவையான நுண்ணுயிர் உரங்கள், தண்ணீர் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுத்தனர். தற்போது நான்கு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட உளுந்து அறுவடைக்குத் தயாராகி வருகிறது" என மகிழ்ச்சியுடன் நம்மிடம் தெரிவித்தனர்.

ராமநாதபுரத்தில் 2ஆம் போக சாகுபடி

அரசின் நடவடிக்கை

இருபோக சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு உதவிய வேளாண் இணை இயக்குநர் தெரிவிக்கையில், ”நல்ல மழை காரணமாக நீர்நிலைகளில் நீர் இருப்பு அதிகரித்தது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் செயல் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தினோம்.

விவசாயப் பணி

இதனால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ராமநாதபுரம் மாவட்டத்தில் 4,542 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இரண்டாம் போக சாகுபடியை முடித்துள்ளனர்” என்றார்.

ஆட்சியரின் செயல்திட்டம்

விவசாயிகளின் மகிழ்ச்சிக்கு மூலக்காரணமான மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் நம்மிடம் பேசினார். வேளாண்துறை அலுவலர்களுடன் முழு மூச்சாக உழைத்ததன் விளைவாக 2,770 ஏக்கர் கூடுதலாக விவசாயம் நடைபெற்றுள்ளது. பெரிய கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய், களரி கண்மாய் ஆகிய மூன்று பிராதான கண்மாய்களை பயன்படுத்தினோம்.

பருத்தி

சாகுபடி செலவை கழித்துவிட்டுப் பார்த்தால் விவசாயிக்கு 12 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய்வரை கூடுதல் வருமானம் கிடைக்கும். ஊரடங்கு காலத்தில் இந்த வருமானம் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதை இந்த ஆண்டோடு நிறுத்திவிடாமல் வரும் காலங்களிலும் இரண்டுபோக சாகுபடி செய்ய முயற்சிகள் எடுப்போம்” என்றார்.

இதையும் படிங்க: கால் கிலோ விதை நெல்; 4 டன் விளைச்சல் - விவசாயி சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.