ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள், கடல் பல்லிகள் கடத்தப்படுவதாக திருச்சி சுங்கத்துறை புலனாய்வு பிரிவு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் திருச்சியிலிருந்து வந்த அலுலர்கள் தொண்டி அருகே வீரசங்கிலி மடம் கடற்கரையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முட்புதருக்குள் பதுக்கி வைத்திருந்த ஆறு மூட்டைகளை கைப்பற்றினர். அவற்றில் சுமார் 50 கிலோ எடையுடைய பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், கடல் பல்லிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த, சுங்கத்துறை புலனாய்வு பிரிவு அலுவலர்கள் திருச்சிக்கு கொண்டு சென்றனர்.
இவற்றின் சர்வதேச மதிப்பு 25 லட்சம் ரூபாய் இருக்கும் என சுங்கத்துறை புலனாய்வு அலுவலர்கள் தெரிவித்தனர். இவற்றை இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்திருக்கலாம் எனவும், கடத்த வைத்திருந்தவர்கள் யார் என்பது குறித்தும் சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘சதுரங்க வேட்டை’ பாணியில் அரங்கேறிய மோசடி - திமுக பிரமுகர் உள்பட மூவர் கைது!