வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இதனால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
கடந்த 17ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக இன்று அம்மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய நான்கு தாலுக்காவிற்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. மேலும் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
இதேபோல் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கனமழை எச்சரிக்கையை அடுத்து புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மழை வெள்ள அபாய முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்!