ராமநாதபுரம் மாவட்ட எல்லையான க.விலக்கில் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் முருகனுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து, கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அமமுகவின் வெற்றி வாய்ப்பு முதுகுளத்தூர் தொகுதியில் பிரகாசமாக உள்ளது" என்றார்.
சசிகலா அரசியலிருந்து ஒதுங்கியிருப்பது அமமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, " அமமுகவின் வெற்றி வாய்பை அதிகரிக்கும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தடல்புடலாக திமுக வேட்பாளருக்கு வரவேற்பு: கடைசியில் அடிதடியில் முடிந்த நிகழ்ச்சி!