ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் 40 வயது ஆணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 23 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே, சிவகங்கையில் மருத்துவமனையில் சகிச்சை பெற்று வந்த 12 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், மாவட்டத்தில் 11 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து: 8 பேர் கவலைக்கிடம்