ராமநாதபுரத்தில் காரோனா பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை 135 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 75 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 59 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 14) மட்டும் ராமநாதபுரம், கீழக்கரை, முதுகுளத்தூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 23 பேருக்கு காரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தொற்று பரவிய எண்ணிக்கையில் இன்று (ஜூன் 14) பதிவானதே அதிகம். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 158ஆக அதிகரித்து உள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா எதிர்ப்பு போரில் உயிரிழந்த பெண் செவிலியர்!