இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக துறைமுக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், 300 மதுபாட்டில்கள் உள்பட கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக துறைமுக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவில் முதியவரை முட்டி தூக்கிய காளை மாடு