ETV Bharat / state

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்! - srilanka govt

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து ராமேஸ்வரம் மீன்வர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

author img

By

Published : Jan 11, 2021, 4:39 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர் கிருபை என்பவருக்குச் சொந்தமான படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி நேற்று (ஜன. 10) இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர்.

இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மீனவர் சங்கத்தினர் சார்பில் நேற்று (ஜன. 10) தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!
ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 51 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், அத்துமீறி பறிமுதல்செய்யப்பட்ட 7 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்றுமுதல் (ஜன. 11) ராமேஸ்வரம் மீன்வர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட படகுகள் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் ரூபாய் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.