ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் பணியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், “திருக்கோயில் பணியாளர்களின் பணி சம்பந்தமான பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு தேர்வு நிலை, சிறப்பு நிலை , விடுப்பு சம்பளம், விழாகால சிறப்பூதியம் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்திட பணிப்பிரிவு இடத்தில் உரிய தகுதி வாய்ந்த பிரிவு எழுத்தரை நியமனம் செய்து பணியாளர்களுக்கு உதவிட வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களை அங்கீகரிக்கப்பட்டவாறே நிரப்பிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்போது இத்திருக்கோயிலில் பல ஆண்டுகளாக எவ்வித பலனும் இல்லாமல் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களின் முன் அனுபவத்தினை காரணம் காட்டி அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணி நிரந்தரம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
அதன்பின்னர் இந்தக் கோரிக்கையை கோயில் இணை ஆணையர் கல்யாணியிடம் வழங்கினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே அவரின் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.