ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதசுவாமி திருக்கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். தற்போது கரோனா தொற்று காரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பணம் எண்ணப்படுகிறது.
இந்நிலையில் இன்று (டிச.31) காலை கோயில் உண்டியல் ஆணையர் கல்யாணி தலைமையில் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக 46 லட்சத்து 22 ஆயிரத்து 856 ரூபாய், தங்கம் 36 கிராம், வெள்ளி 735 கிராம் காணிக்கை வசூலானது.
இதையும் படிங்க: திருவள்ளூரில் இரண்டு கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு: போலீசார் விசாரணை