ETV Bharat / state

சத்திரிய நாடார் உறவின்முறையுடன் பிரச்னை: ஆசிரியை தற்கொலை முயற்சி

இராமநாதபுரம்: பள்ளியில் ஒதுக்கி வைக்கப்பட்ட பள்ளி ஆசிரியை தற்கொலை முயற்சி செய்ததை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ramanathapuram school teacher suicide attempt

author img

By

Published : Feb 4, 2021, 4:03 PM IST

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் குருராஜனின் மனைவி ஆரியமாலா. இவரது கணவர், மைத்துனர் மேகராஜன் ஆகியோருக்கு சத்திரிய நாடார் உறவின்முறையுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆரியமாலாவிடம் மற்ற ஆசிரியர்கள், ஆசிரியைகள் பேசக்கூடாது எனவும், பள்ளியில் நடக்கும் அலுவல் சார்ந்த கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது எனவும் பள்ளி தலைமையாசிரியர் சேர்மம் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் ஆரியமாலா சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் நேற்று (பிப். 3) பள்ளியில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அருகே நின்றிருந்த ஆரியமாலாவை கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது, மற்ற ஆசிரியர்களிடம் பேசக்கூடாது என உத்தரவிட்டிருந்த நிலையில் எதற்காக கூட்டத்திற்கு வந்தார் எனத் தலைமை ஆசிரியர் சேர்மம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆரியமாலா வீட்டிற்குச் சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அவரது கணவர் குருராஜன் உடனே அவரை மீட்டு கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதுகுறித்து ஆரியமாலா கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பள்ளி நிர்வாகி ராஜேஷ், பள்ளி தலைமை ஆசிரியை சேர்மம் ஆகியோர் மீது கமுதி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க... ஓயாத சாதிக் கொடூரங்கள் - பட்டியலின இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்து கொடுமை!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.